என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவன் தற்கொலை"
நெல்லை:
ராஜபாளையம் அருகே உள்ள சவுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் பிரேம் ஆனந்த். இவரது மகன் எபி (வயது14). இவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறைக்காக சங்கரன்கோவிலில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று பாட்டி வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு செல்கிறோம் என்று எபியை அழைத்துள்ளார்கள்.
அதற்கு எபி நான் வரவில்லை என்று கூறி வீட்டில் தனியாக இருந்தான். இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற அவனது உறவினர்கள் மாலையில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டிற்குள் எபி தூக்கு போட்டு பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து எபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அவன் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பனியன் தொழிலாளி. இவரது மகன் சிவசுப்பிரமணியம் (15). இவர் இடுவம் பாளையத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி இருந்தார்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவன் சிவசுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் தேர்வு முடிவை பார்க்க சென்றார். அப்போது அவர் 247 மதிப்பெண்ணே பெற்று இருப்பது தெரிய வந்தது.
அதிக மதிப்பெண் பெறுவேன் என ஆவலுடன் இருந்த சிவசுப்பிரமணியம் குறைவான மதிப்பெண் பெற்று இருந்ததால் மனம் உடைந்தார். அவர் அழுது புலம்பியபடி காணப்பட்டார். அவரை சக நண்பர்கள் பெற்றோர் சமாதானம் செய்தனர்.
ஆனாலும் சமாதானம் அடையவில்லை. நேற்று இரவு மாணவன் சிவசுப்பிரமணியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிவ சுப்பிரமணியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #SSLCExam
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி இந்துமதி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அருண் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் இந்துமதியை பார்ப்பதற்காக அவரது தாயார் செல்வி வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இந்துமதி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் செல்வி, மகள் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவரது கணவர் மற்றும் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. ஜவகர், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்துமதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ஆறுகாணி கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மகன் சரத் (வயது 18). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.
இந்த நிலையில் அவர், மேல்படிப்பிற்கு பணம் இல்லை என சரத் கூறி வருத்தப்பட்டு வந்தார். நேற்று உறவினர் வீட்டில் படுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆறுகாணி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தோப்பு கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது17). இவர் கவரைப்பேட்டை அரசினர் மேனிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் அவரது அண்ணனும் இறந்து போனார். இதனால் காந்தி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காந்தி வந்தார். ரெயில் நிலையம் அருகே நடந்து சென்ற அவர் திடீரென சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச்சென்ற புறநகர் மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில்வே போலீசார் காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள திக்க திம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கார்த்திக் (வயது15). இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று அந்த பள்ளியில் கார்த்திக், சேதுமாதவன், இனியன் ஆகிய 3 பேரும் 2 பாடத்தில் மார்க் குறைவாக வாங்கியதால் ஆசிரியர்கள் அந்த 3 மாணவர்களை பிரம்பால் அடித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த கார்த்திக் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் என்னை பிரம்பால் தாக்கியதால் எனக்கு வலிக்குது என்று கூறினார். இதற்கு பெற்றோர் ஆறுதல் கூறினார்.
இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மாணவன் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மாணவன் கார்த்திக் ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் திட்டியதால் மாணவன் கார்த்திக் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
சென்னை:
திருவொற்றியூரை சேர்ந்தவர் பாரதி. டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 22).
2014-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மணிகண்டன் படிப்பை முடித்து விட்டு மணலியில் உள்ள பெட்ரோலிய கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
கல்லூரியில் படிக்கும் போது மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வேறொரு கல்லூர் மாணவருடன் மோதலில் ஈடுட்டு வந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டு மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ந் தேதி மணிகண்டனை சென்ட்ரல் ரெயில் நிலையம அருகே ஏழுகிணறு போலீசார் கைது செய்தனர். அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று அழைத்து சென்றனர்.
சுமார் 50 நாட்கள் ஜெயிலில் இருந்த மணிகண்டன் வெளியே வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மணிகண்டனிடன் தாய் பாரதி கூறியதாவது:-
எனது மகன் கல்லூரியில் படித்த போது கடந்த ஆண்டு காமராஜர் சாலையில் மாநகர பஸ் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் அவனை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.
அந்த சம்பவத்தில் அவனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தான். அதன் பிறகு ஜாமீனில் வந்த அவன் பெட்ரோலிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.
கடந்த ஜூன் 18-ந் தேதி ஏழுகிணறு போலீசார் எங்களுக்கு போன் செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்தனர். உடனே நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து சென்றோம். அங்கு என் கண் முன்னேயே மணிகண்டனை போலீசார் தாக்கினார்கள். நான் போலீசாரை சமாதானப்படுத்தினேன்.
எனது மகன் முழுமையாக மாறிவிட்டான். தற்போது அவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறான் என்று கூறினேன். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கு பின்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவன் மிகவும் சோகத்துடன் இருந்தான். குடும்பத்தின் பெயரை கெடுத்து விட்டதாக கூறி வேதனைப்பட்டான்.
நான் ஒருமுறை தவறு செய்துவிட்டதாகவும், அதை வைத்து என்னை தவறாக சித்தரித்து விட்டனர். போலீசார் தனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறினான்.
நாங்கள் அவனை சமாதானப்படுத்தினோம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறினார்.
ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டன் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். போலீசார் யாரையும் ஆதாரம் இல்லாமல் கைது செய்வதில்லை.
ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர் அதன்பிறகு தவறு செய்யவில்லை என்றால் அவரை விட்டுவிடுவோம் என்றனர்.
காஞ்சீபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மகன் உமேஷ் (வயது 17). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு உமேஷ் மற்றும் சில மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக விப்பேடு கிராம மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் உமேஷ் மற்றும் சில மாணவர்களை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து விடுவித்தனர். மேலும் இந்த மாணவர்கள் கஞ்சா விற்றதாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவியது.
போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனம் உடைந்த உமேஷ், நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விப்பேடு கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். #tamilnews
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெரிய கம்மாலப்பட்டியை சேர்ந்த பூபதி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுக்காக காத்திருந்த விக்னேஷ் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் விஷால் (வயது 15). ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தான்.
இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவன் விஷால் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தான். இதனால் மனமுடைந்த விஷால் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்